கன்னி ராசி அன்பர்களே …! இன்று வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாளாக இருக்கும். வரவும் செலவும் சமமாகவே இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருந்தாலும் அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும்.
வீண் அலைச்சல் தடை தாமதம் போன்றவை அவ்வப்போது இருக்கும். எதிர்ப்புகள் நீங்கினாலும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே செயல்படுங்கள். தொழில் போட்டிகள் ஓரளவு சரியாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை இருந்துக்கொண்டே இருக்கும். கொஞ்சம் முயற்சி செய்து முன்னேற பாருங்கள் கூடுமானவரை அவரிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அக்கம்பக்கத்தினரிடம் தயவுசெய்து கோபத்தைக் காட்ட வேண்டாம்.
காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும், இருந்தாலும் பேச்சில் நிதானத்தை எப்பொழுதுமே கடைபிடியுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.