Categories
உலக செய்திகள்

மொனோக்கோவுக்கு சுற்றுப்பயணம்….. சீன அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு உற்சாக வரவேற்பு….!!

மொனோக்கோவுக்கு சுற்றுப்பயணம் சென்ற சீன அதிபர் மற்றும் அவரது மனைவிக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மொனாக்கோவுக்கு  சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அவரது மனைவி பெங் லீயுவானும் சுற்று பயணம் மேற்கொள்ள சென்றனர். அங்கு அந்நாட்டு இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் மற்றும் இளவரசி சாரலீன் ஆகியோரால் அவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு அதிபரும் கைகுலுக்கி கொண்டனர். அதன் பிறகு அரண்மனையை  அரச குடும்பத்தினருடன் சீன அதிபரும் அவரது மனைவியும் சுற்றிப்பார்த்தனர்.

Image result for Tour with Chinese wife Xi Jinping in Monaco

அதன் பிறகு அவர்கள் கொண்டு வந்த பாண்டா கரடி பொம்மைகள் மற்றும்  சைக்கிளை இளவரசர் ஜாக்குஸ் மற்றும் இளவரசி கேப்ரியலாவின் இரட்டைக்  குழந்தைகளுக்கு பரிசளித்தனர். அவர்களுடைய  ஆணும், பெண்ணுமாக பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு இப்போது 4 வயதாகிறது. அந்த குழந்தைகளுடன்  சீன அதிபர் அன்பாக பேசி கலந்துரையாடி மகிழ்ந்தார்.

Categories

Tech |