மீன ராசி அன்பர்களே…! இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிருக்கும். அமைதியான சூழல் நிலவும். காரியத்தடை, வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
மன நிம்மதி இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுத்தம், சுகாதாரம் என்பதில் கவனமாக இருப்பீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு உங்களது ஆலோசனை கேட்டு அதன்படி நடந்து காரிய வெற்றியும் அடைவார்கள். தொழிலில் சில மாற்றங்கள் இருந்தாலும் எந்தவித பிரச்சினையும் இல்லை.
வசீகரமான பேச்சால் புதிய காதலில் வயப்பட கூடும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: நீல மற்றும் இளம் பச்சை நிறம்.