தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பிரமாதமாக இருப்பதாக தமிழக முதல்வர் எட்டாப்படி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை கட்டுப்படுத்த நாங்கள் தவறி விட்டோமா ? இந்தியாவிலேயே சிறப்பான முறையில் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இன்னைக்கு மருத்துவ நிபுணர்கள் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள. படித்தவர்கள் பாராட்டுகிறார்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட வெளி மாநிலத்தில் தங்கியிருந்த ஒரு வயசான அம்மா ட்ரெயின்ல வந்தாங்க, அவுங்க சொன்னத வாட்ஸ் அப்ல பாத்து இருப்பீங்க.
ட்ரெயின்ல வந்த அம்மாவோட பேட்டியை பார்த்தேன், யாருன்னு எனக்கு தெரியாது. அம்மா சொன்ன செய்தி உங்கள் எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறேன். பல ஊடகத்தில் வந்தது, வாட்ஸ்அப் ல வந்த அம்மா சொல்றாங்க. உடனே அதிகாரி வந்தாங்க, எங்களை எங்க கூட்டிட்டு போனாங்க தெரியல, ஒரு இடத்தில் தங்க வச்சி பிரமாதமான வசதி செய்து கொடுத்தாங்க. அரசுக்கு முழு பாராட்டு தெரிவிக்கிறேன் அப்படினு அந்த அம்மா சொல்றாங்க, ஆகவே இப்படி பொதுமக்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு இப்படி அருமையான வசதிகளை செய்து கொடுக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறப்பான வசதி செய்து கொடுத்து, உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கே கொண்டு விட்டு விடுகின்றோம். இதைவிட என்ன அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும். நோய் வருவது யாருக்குமே தெரியாது ? யாராக இருந்தாலும் அவர்களுக்கு முழு பரிசோதனை செய்யவேண்டும். இன்னைக்கு இந்தியாவிலேயே அதிகமாக பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடு தான். அது மட்டும் இல்லாம இன்னைக்கு பார்த்தோமானால், அதிகமான பரிசோதனை நிலையம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.
கிட்டத்தட்ட 65 பரிசோதனை நிலையம் அமைத்திருக்கிறோம். வேற எந்த மாநிலத்தையும் இவ்வளவு டெஸ்ட் பண்றது கிடையாது. இவ்வளவு சிறப்ப அரசாங்கம் செயல்படுத்தி வருகின்றது. ஆகவே இதற்கு காரணமாக இருந்த நம்முடைய மருத்துவர்களையும், செவிலியர்களையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். இரவு பகல் பாராமல், தன் உயிரையும், பொருட்படுத்தாமல் பணி செய்கிறார்கள். இதுலாம் ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனாவை பொருத்தவரைக்கும் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு, மத்திய அரசினுடைய வழிகாட்டல் படி, மருத்துவ நிபுணர்கள் வழிகாட்டுதல்படி அரசு செயல்படுகின்றது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.