திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கின்றது.
நேற்று காலை திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது செய்யப்பட்டார். பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த நிகழ்வு தமிழகத்தில் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்க்கு திமுக தலைவர் முக. ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில் ஆளுங்கட்சிக்கு செய்யும் ஊழலை ஆர்.எஸ் பாரதி புகார் கொடுக்கிறார், இதனால் அவரை மிரட்ட வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை என்றும்,இதற்கு திமுக பயப்படாது என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
ஆலோசனை கூட்டம்:
அதனைத் தொடர்ந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ஆர்.எஸ் பாரதிக்கு நீதிபதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். அடுத்து மு. க ஸ்டாலின் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். தமிழகம் முழுவதும் ஆளும் அரசு பொய் வழக்குகளை பதிவு செய்கின்றது எனவே இதை குறைத்து பேச வேண்டும் விவாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த இன்றைய கூட்டம் இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
செந்தில் பாலாஜி, டி ஆர் பாலு , தயாநிதி மாறன் :
முக.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் என்று அறிக்கை விட்டதையடுத்து, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலெக்டரை மிரட்டியதாக அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி வசம் ஒப்படைத்து. அதே போல திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டது பிறகு தலைமைச் செயலாளரை சந்திக்க சென்ற திமுக எம்.பிக்களான டி ஆர் பாலு , தயாநிதி மாறன் ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களை போன்று எங்களை நடத்துகிறார் என்றது பேசியது குறித்து பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்று அஞ்சி நீதிமன்றத்தில் முறையிட்டு கைதுக்கான தடை பெற்றனர்.
96 பேர் மீது வழக்கு:
அதைத்தொடர்ந்து நேற்று ஆர் எஸ் பாரதி கைதை கண்டித்து போராட்டம் நடத்தியதாக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 96 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் தான் இன்று காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கின்றது. அதிமுக அரசு திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்வதை சட்டரீதியாக சந்திக்க வேண்டும் என்று தான் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக திமுக தலைவர் தெரிவித்து இருந்தார. அவர் தெரிவித்த அடுத்த நிமிடமே அவர் நினைத்தது போல பல சம்பவங்கள் அரங்கேறியது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இன்று நடக்கின்ற ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.