Categories
சென்னை மாநில செய்திகள்

நாளை முதல் சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!

சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தந்த மாநில அரசுகள் சிவப்பு மண்டலங்களை சில நிபந்தனைகள் விதித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மதுக்கடைகள், சலூன்கள் திறக்கலாம் என்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

25 சதவீத தொழிலாளர்களை மட்டும் கொண்டு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு பகுதிகளால் எல்லைகளுக்கு உட்படாத தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு பணிபுரிய அனுமதி இல்லை.

55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். தினமும் தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசின் நிலையான செயல்பட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |