இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,31,868ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,101லிருந்து 1,31,868ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54,441ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,867ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 73,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,517ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 15,512 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் – 12,905, டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 12,319 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 660 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 208 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 13,273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 802 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 5,735, ஆந்திரா – 2,667 கர்நாடகாவில் 1,743 பேரும் கொரோனா வைரஸா பாதிக்கப்பட்டுள்னர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை 4ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.