விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார திருத்த சட்டம் அமலாக்கினால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க முடியாது, எனவே புதிய மின்திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, அதில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தடைசெய்ய இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தான் தற்போது மின்சார வாரியம் விவசாய மின்சாரத்துக்கு மின்மோட்டார் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது.
இது குறித்து மின்சார வாரியம் விளக்கம் அளிக்கும் போது, கடந்த இரண்டு வருடமாக புதிதாக ஒருவர் இலவச மின்சாரம் பெறுகிறார் என்றால் சொன்னால் அவருக்கு மீட்டர் படுத்துவது வழக்கம் என்று சொன்னால் எவ்வளவு மின்சாரம் விவசாயத்திற்காக செல்கிறது கண்டறிய மின் மோட்டார் வைக்கப்படுகின்றது.ஏனெனில் முழு மின்சாரமும் விவசாயத்திற்கு தான் செல்கிறதா ? என்று கணக்கீட்ட மின்மோட்டார் அவசியமாக தேவைப்படுகின்றது என்று விளக்கம் அளித்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை விவசாயத்திற்க்கென்று 21 லட்சம் இலவச இணைப்பு இருக்கிறது. இதற்காக அரசு ஆண்டுதோறும் 6000கோடி ரூபாய் மானியமாக மின்சாரவாரியத்திற்கு கொடுத்து வருகின்றது.
ஒரு விவசாயி 5 குதிரைத்திறன் மோட்டாருக்கு இலவச மின்சாரம் வாங்கியிருப்பார். தற்போது வரட்சி காரணமாக தண்ணீர் கீழே செல்வதால் அவருக்கு 7குதிரை திறன் கொண்ட மின் மோட்டார் தேவைப்படும். இதற்க்கு கொடுத்தலாக மின்சாரம் தேவைப்படுவதால், அரசுக்கு கூடுதலாக இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஒருவர் 20,000 செலுத்த வேண்டும் என்று மின்சார வாரியம் சொல்லிஉள்ளது. விவசாயிகள் கவலை அடையவேண்டாம், இது தற்போது போடப்பட்ட உத்தரவு காரணமாக தான். ஆனால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.