செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு 764ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 245 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 513 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என பலருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியாகி வருகிறது. அதேபோல பல்வேறு மாநிலங்களில் இருந்து செங்கல்பட்டு திரும்பியவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.