புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
வீட்டு உபயோகப் பயன்பாட்டிற்கு யூனிட்டிற்கு குறைந்த பட்சம் 5 காசுகள் முதல் அதிகபட்சம் 50 காசுகள் வரை உயரும் என்றும் வர்த்தக பயன்பாட்டிற்கு குறைந்த பட்சம் 10 காசுகள் முதல் அதிகபட்சம் 20 காசுகள் வரை உயர வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். மின்விநியோகம் தனியார் மயமாக்கப்படுவதால் சேவைகள் விரைவாக அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும்.
அதே சமயம் தனியார் வழங்கும் இந்த சேவையில் குறைகள் இருந்தால் மின் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். மின் வினியோக நிறுவனங்களுக்காக புதிய கட்டண கொள்கை உருவாக்கப்படும். மின் பகிர்மான நிறுவனங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார், இந்த நிலையில் புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.