Categories
உலக செய்திகள்

100 லட்சம் குழந்தைகளுக்கு சிக்கல்…! வெளியான அதிர்ச்சி தகவல் …!!

கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால், உலக அளவில் 10 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளன.

இது குறித்து உலக உணவு திட்டத்தின் ஊட்டச்சத்து இயக்குநர் லாரன் லாண்டிஸ் கூறுகையில், “கரோனாவின் தாக்கம் உலகின் 10 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு தள்ளக்கூடும்.

மோசமான ஊட்டச்சத்திலிருந்து ஏற்கனவே பலவீனமான உடல்களில் இந்த நோய்த் தொற்று பேரழிவை ஏற்படுத்தும். அதே நேரத்தில், தினசரி வருமானத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். கரோனா ஊரடங்கு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை கடுமையாக பாதித்துள்ளன.

ஏழை நாடுகளில் உள்ள குடும்பங்களுக்கு சத்தான உணவை வழங்குவது மிகவும் கடினம். நாங்கள் இப்போது செயல்படத் தவறினால், எதிர்கால சந்ததியினரில் உயிரிழப்பு, உடல்நலம், உற்பத்தித்திறனை எதிர்கொள்வோம். கரோனாவின் விளைவுகள் பல மாதங்கள், ஆண்டுகள், பல தசாப்தங்களாக உணரப்படுமா என்பதை தீர்மானிக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்டவர்கள், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களாகவும், அதன் சமூக – பொருளாதார வீழ்ச்சியிலும் முதன்மையாக இருப்பதற்கான ஆபத்து உள்ளது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு போதிய உணவு நுகர்வு, நோய், திடீரென எடை இழப்பு காரணமாக ஏற்படுகிறது.

உடனடியாக உரிய சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மரணத்திற்கு வழிவகுக்கும். உணவுப் பாதுகாப்பில் கரோனாவின் சமூக – பொருளாதார தாக்கங்கள் காரணமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு 20 விழுக்காடு உயரக்கூடும் என்று உலக உணவு திட்டம் (WFP) மதிப்பிடுகிறது. இந்த எண்ணிக்கை உணவுப் பாதுகாப்பின்மையின் விளைவாகும்” என்றார்

Categories

Tech |