Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…செல்வாக்கு அதிகரிக்கும்…சிந்தனை மேலோங்கும்…!

மிதுன ராசி அன்பர்களே …!      இன்றைய நாள் உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். குடும்ப பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும்.

வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். எடுத்த வேலையை நன்றாக முடிவதற்கு நீங்கள் கடுமையாக செயல்படுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மனைவியிடம் அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். முக்கியமாக வெளியூர் பயணம் செய்வதாக இருந்தால் உடல் மீது கவனம் இருக்கட்டும்.

இன்று காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண முயற்சியை கண்டிப்பாக மேற்கொள்ளுங்கள் சிறப்பாக நடைபெறும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்வது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |