Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…மனக்குழப்பம் நீங்கும்…மதிப்பு கூடும்…!

கடக ராசி அன்பர்களே …!     கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள். விருப்பங்களும் கைகூடும். மரியாதையும்,அந்தஸ்தும் அதிகரிக்கப் கூடும். புதிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி, தெளிவு பெறுவதற்கான வாய்ப்புகளும்உண்டு. பெண்களால் யோகம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபாடுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். இன்று உடல் ஆரோக்கிய பொருத்தவரை ரொம்ப சிறப்பாகவே இருக்கும். அதனால் உள்ளம் மகிழ்ச்சியாகவே காணப்படும்.

அது போலவே இன்று புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் உண்டு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |