Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…மகிழ்ச்சி உண்டாகும்…கவலை வேண்டாம்…!

கன்னி ராசி அன்பர்களே …!      இன்று நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்து பேசுவார்கள். நம்பிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற மாற்றுத் திட்டம் உதவும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்பு செலவு கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும்.

மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுப்பீர்கள். அதேபோல பிள்ளைகளுடைய கல்வி பற்றிய கவலை உங்களுக்கு இருந்துகொண்டிருக்கும். தயவு செய்து இதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது.

முடிந்தால் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். மனமும் அமைதியாக காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் பச்சை நிறம்.

Categories

Tech |