Categories
மாநில செய்திகள்

கும்பகோணத்தில் இன்று 107 டிகிரி, சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது !

சென்னையில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் பரிதவித்தனர். கும்பகோணத்தில் இன்று அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. கள்ளக்குறிச்சியில் – 106, வேலூரில் 106, கடந்த இரண்டு நாட்களாக வேலூரில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

இதனிடையே வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் கள்ளக்குறிச்சி நாமக்கல் திருச்சி கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் வெப்பநிலை 40 – 42 டிகிரி செல்ஸியசாக அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |