Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 10,340 ஆண்களும், 5,932 பெண்களும், 5 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 12,275 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,09,615 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 41 அரசு மற்றும் 27 தனியார் மையங்கள் என மொத்தம் 68 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |