Categories
உலக செய்திகள்

சூப்பர் கண்டுபிடிப்பு…! ” பாதுகாக்கும் கண்ணாடிப் பெட்டி” அசத்திய அமெரிக்கா …!!

மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் கண்ணாடிப் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

உலகிற்கே பெருத்த சவாலாக இருந்து, லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால், உலக நாடுகள் திணறி வருகின்றன. அதே வேளையில் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டு மரணித்து போய் விடுகின்றனர். கொரோனா நோயாளிகளின் இருமல், தும்மல் துளிகள் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மீது படும்போது மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்றுக்கு உண்டாகின்றது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை மருத்துவர்களுக்கு தொற்றில் தாக்கம் இல்லாமல் பாதுகாக்க புதிய வடிவமைப்பு ஒன்றை அமெரிக்காவில் உள்ள எமோரி பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.

கொரோனா சிகிச்சை பெரும் நோயாளிகளின் தலையில் வைக்க கூடிய கண்ணாடி பெட்டியை எமோரி பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இது இரண்டு வகை படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்று பயன்பாட்டுக்கு ஏற்றாற் போல மடக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று சி (C) வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் தலையில் இதனை அணிவித்து, அதற்குள் சுவாசக் குழாயை செலுத்தி விட்டால் நோயாளிகளிடம் இருந்து வரும் இருமல,  தும்மல் துளிகள் மருத்துவர்கள் மீது படாமல், கொரோனா பரவல் தடை செய்யப்படும்.

இதனால் மிகச்சிறிய உயிரணு செல் கூட, கண்ணாடிப் பெட்டியைவிட்டு வெளியேற முடியாது.  என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், இது கொரோனா நோய் பரவலை முற்றிலும் தடுத்து விடும் என்றும், கையுறை அணிந்து கொண்டு மருத்துவர்கள் இந்த கண்ணாடி பெட்டிக்குள் சுவாசக் குழாயை பொருத்திவிட்டு, நோயாளிகளுக்கு எந்த கவலையும் இல்லாமல் சிகிச்சை அளிக்கலாம், இது மருத்துவர்களுக்கான ஒரு கவசமாக செயல்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |