Categories
பல்சுவை

இனி எங்க ஆட்டம் ….! ”பிளிப்கார்ட், அமேசானுக்கு செக்” வெறித்தனமா இருக்கும் …!!

பிளிப்கார்ட், அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க  ஜியோமார்ட் வருவதால் ஆன்லைன் வணிகத்தில் கடும்போட்டி இருக்கும் என தெரிகின்றது.

கச்சா எண்ணெய் பொருட்களின் விலை சரிவின் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்தது. இதனை எப்படி ஈடு செய்யலாம் என்று திட்டமிட்ட ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் வணிகத்தை தொடங்கியுள்ளது. ஆன்லைன் விற்பனையைத் தொடங்கி உள்ளது. ஜியோ மூலம் அத்தியாவசிய பொருட்களை வீடுதோறும் டெலிவரி செய்யும் புதிய வணிகத்தை மும்பையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கிய சில நாட்களிலேயே ஜியோ நிறுவனத்தின் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் சேர்த்து கிட்டத்தட்ட பத்து பில்லியன் டாலரை முதலீடு செய்தன. இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ஜியோமார்ட் தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் கொரோனா  ஊரடங்கு முடிவதற்குள் ஜியோமார்ட் அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்யும் சேவை இந்தியாவில் 200 நகரங்களில் தொடங்க விருப்பதாக தெரியவந்துள்ளது. ஜியோமார்ட் இணைய விற்பனை நடைமுறைக்கு வந்ததும் வீடுகளுக்கு இலவச டெலிவரி செய்ய இருப்பதால் ஏற்கனவே இருக்கும் அமேசான் ஃப்ளிப்கார்ட் மற்றும் உள்ளூர் கடைகளில் விற்பனைக்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |