நாளை முதல் உள்நாட்டு விமான பயணம் தொடங்க இருக்கும் நிலையில் தமிழக அரசு விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை நாளை முதல் தொடங்க இருக்கின்றது. இதற்கான வழிகாட்டல் நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்ட நிலையில் தற்போது அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழகத்திற்கு விமானம் மூலம் வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டும். விமான நிலையத்தில் காய்ச்சல், இருமல், சளி இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அப்படி இருக்கக் கூடியவர்கள் உடனடியாக ஸ்கேன் செய்யப்படுவார்கள். அங்கே தெர்மல் ஸ்கேனர் இருக்கும். விமானத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்கள் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் வரும் போது அவர்களும் இணையத்தின் மூலமாக பதிவு செய்ய வேண்டும் வீட்டு முகவரியை கட்டாயம் கொடுக்க வேண்டும். விமானம் மூலம் வருபவர்களுக்கு கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக ரப்பர் ஸ்டாம்பு முத்திரைகளை பதிக்கப்படும். கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களுக்கு நிச்சயமாக 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும் அல்லது 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். விமான நிலையத்தில் தவறான தகவல்களை கொடுத்தல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வழிகாட்டு நெறிமுறை அரசனை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.