Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS DC அணிகளுக்கிடேயேயான போட்டியில் பும்ராவுக்கு காயம்…..!!

ஐ.பி.எல்லில் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பந்து வீச்சாளர் பும்ராவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளரான  பும்ரா எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர். பும்ரா சிறந்த பந்து வீச்சாளர் என  கிரிக்கெட் ஆலோசகர்களால் கூறப்பட்டது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்திய அணியில் இடம் பிடித்தார்.. உலக கோப்பையில் எதிரணிகளை அச்சுறுத்தும் பவுலராக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for பும்ரா

இந்த நிலையில் ஐ.பி.எல் தொடரின் 3ஆவது  போட்டி மும்பை வான்கேட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி களமிறங்கி விளையாடியது. அந்த அணியில் ரிசப்பன்ட் கடைசி கட்டத்தில் அதிரடியில் இறங்கினார்.  இறுதியில் கடைசி ஓவரை ஜஸ்பிரிட் பும்ரா வீசினார். அப்போது எதிரே ரிஷபன்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். பும்ரா  கடைசி பந்தை  வீசியதும்  ரிஷபன்ட் அடித்தபோது பந்தை  பிடிப்பதற்காக பும்ரா தனது இடது கையினால் பிடிக்கும் போது கீழே விழுந்தார். அதனால்  தோல் பட்டையில் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டது.

இதையடுத்து பும்ராவுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றும், விரைவில் குணமடைவர் என்றும்  மும்பை அணி தெரிவித்தது. ஆனால் 214 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 19.2 ஓவரில் 176 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்ததையடுத்து கடைசி விக்கெட்டுக்கு பும்ரா களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |