Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தாமதம் ஏன்?

கொரோனா ஊரடங்கு ஆரம்பித்து 2 மாதம் ஆகிவிட்டது, நம்முடைய இயல்பு வாழ்க்கைக்கு எப்போ திரும்புவோம் என்கிற ஏக்கம் மக்கள் மனசுல தொடர்ச்சியாக இருந்து கொண்டு தான் இருக்கு. இந்த மாதிரியான ஒரு சூழலில்தான் கொரோனா எப்போ முடிவுக்கு வரும், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கிறதுக்கு ஏன் இவ்வளவு தாமதம் ? அப்படிங்கிற ஒரு கேள்வி ரொம்ப ஆழமாகவே எழுது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தாமதம் ஆகிறதா ? இல்லையா ? இதில் என்னென்ன நடைமுறையில் இருக்கிறது. என்னென்ன சவால்கள் இருக்கு என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

பொருளாதாரம் – அதல பாதாளம் :

ஒரு விஷயத்தை நாம தெளிவா புரிஞ்சுக்கணும். கொரோனா தடுப்பு மருந்து மட்டும் கிடையாது, எந்த ஒரு தடுப்பு மருந்தாக இருந்தாலுமே அதை உருவாக்குவது என்பது ஒரு நீண்டகாலம் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு நடைமுறை. பல கட்ட ஆய்வுகள், பல கட்ட பரிசோதனைகளை தாண்டிதான் எந்த ஒரு தடுப்பு மருந்துமே அனுமதி வழங்கப்படும். இந்த சூழலில்தான் முக்கியமா இந்த கொரோனாவை பார்க்கும் போது, மக்களை இதிலிருந்து காப்பாற்றுவது என்ற ஒரு விஷயத்தைத் தாண்டி, பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு போகக்கூடாத என்ற ஒரு விஷயத்தையும் உலக நாடுகள் முக்கியமா பார்த்துக்கிட்டு இருக்காங்க.

60,000 கோடி:

உலக நாடுகள் எல்லாம் கிட்டத்தட்ட 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொரோனா தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சிக்காக  செலவு பண்ணிட்டு  இருக்காங்க. நம்ம நாட்டு மதிப்பில் கிட்டத்தட்ட 60,000 கோடி ரூபாய். இந்தியாவிலுமே பல நூறு கோடி ரூபாய் இதற்காக செலவு செய்துகொண்டு தான் இருக்கின்றார்கள். இதற்காக PMCARES நிதியிலிருந்து ரூ 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை:

கொரோனா தடுப்பு மருந்து வந்து தொடங்கியாச்சு. பலகட்ட பரிசோதனைகள் நடந்துகிட்டு இருக்குனு சொன்னோம். முதலில் எலியில் ஆரம்பிச்சு முயல் அப்பறோம் குரங்கு, அப்பறோம் மனிதன் இப்படிதான் இந்த ப்ராசஸ் போகும். மனிதர்களும் இதற்கு அவசியமாகிறார்கள். இதனாலவே உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்தி இருக்காங்க. இவங்களுக்கு என்ன பணி என்றால், இவர்களுடைய உடலில் கொரோனா தடுப்பு மருந்து கொரோனா நோய்க்கு எதிராக இந்த மாதிரி செயல்படுத்து, என்னெனென விளைவுகளை ஏற்படுத்துது அப்படிகிறது தான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம்.

10 வருடம் ஆகலாம்:

எதற்காக இத்தனை ஆயிரம் பேர் இந்த ரிஸ்க் எடுக்குறாங்க  அப்படின்னு பார்த்தா, பலகோடி பேரின் நன்மைக்காக, எந்த ஒரு விபரீத விளைவையும்,  எந்தவித பக்க விளைவையும் கொரோனா தடுப்பு மருந்தானது ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக மருந்து தயாரிப்பு நிறுவனங்களாக இருக்கட்டும், பல்வேறு நாடுகளாக இருக்கட்டும் ரொம்ப உறுதியா இருக்காங்க. அதனாலதான் இவ்வளவு கடுமையான விதி முறைகளும் பின்பற்றப்பட்டு இருக்கு. வழக்கமாக நாம பார்த்தோமானால் இந்த மாதிரியான, தடுப்பு மருந்துக்கள் தயாரிப்பதற்கு குறைந்தபட்சம் 2 வருடத்திலிருந்து, அதிகபட்சமாக 10 வருடம் கூட காலமாகும்.

20 மாதம் ஆகியது:

சமீபத்துல நாம எந்த நோய்க்காக இவ்வளவு சீரிய முறையில் தடுப்பு மருந்தை கண்டுபிடித்தோம் என்றால் எதுவுமே கிடையாது. கொரோனா வைரஸுக்காக மட்டும் தான் இவ்வளவு சீக்கிரமாக மருத்துவ பணி வேகப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கு. கொரோனா வைரஸ் என்பது ஒரு பொதுப்பெயர். டெக்னிக்கலா இந்த வைரஸ் பெயர் வந்து சார்ஸ் 2. 17, 18 வருஷத்துக்கு முன்னாடி சார்ஸ் 1 உலக ஆட்டிவைத்து உங்களுக்கு  தெரியும். அந்த சார்ஸ் ஒன்றுக்கே வந்து தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு 20 மாதங்கள் ஆகிவிட்டது. அதுக்கப்புறம்தான் பரிசோதனை, அடுத்த கட்டம் எல்லாம் போக வேண்டியதிருக்கும்.

செப்டம்பர் மற்றும் அக்டோபரில் தடுப்பு மருந்து:

அதற்கே 20 மாதம் ஆகியது என்ற சூழலில் இந்த முறையில் இந்த கொரோனா தடுப்பு மருந்தானது, இந்த வேகம் என்பது ரொம்ப அதிகமா இருக்குன்னு சொல்லலாம். தொழில்நுட்ப நிறைய வளர்ந்திருக்கு, ஆராய்ச்சியாளர்களும் கூட்டாக இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்துக்கொண்டு இருக்குறதால  செப்டம்பர் இறுதியிலோ அல்லது அக்டோபர் மாத தொடக்கத்திலோ இதற்கான தடுப்பு மருந்து கிடைத்துவிடும் அப்படின்னு சொல்லிட்டு மருந்து நிறுவனங்கள் ரொம்ப நம்பிக்கையாகவே  சொல்றாங்க.

40க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு கம்பெனிகள்:

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் என்று சொன்னவர் கிட்டத்தட்ட உலகம் முழுக்க 40 பிரதான மருந்து தயாரிப்பு கம்பெனிகள் 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் குழுக்கள் மருந்து தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்காங்க.

முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள்:

அமெரிக்காவின் MODERNA,

ஜெர்மனியிலுன் PFIZER & BNTech,

பிரான்சின் SINNOVAC,

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக குழு இவர்கள் எல்லாம் இந்த ஆராய்ச்சியில் முன்னோடியில் இருக்காங்க . இதுல குறிப்பாக அமெரிக்காவின் MODERNA நிறுவனம் வேகமாகவே முன்னணியில் இருக்காங்க. அவுங்களோட தடுப்பு மருந்து பரிசோதனை தற்போதைய நிலையில் 2 கட்டத்தில் வெற்றிகரமாகவே நடந்து கொண்டு இருக்கின்றது என்று சொல்லப்படுது.

இந்தியாவிலும் ஆராய்ச்சி:

இவர்களை தாண்டி இதற்கான ஆராய்ச்சிகள் இந்தியாவிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கு. இரண்டு குழுக்கள் பிரதானமாக இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியை செய்து வருகின்றார்கள். ஓன்று Bharat Biotech International Limited மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் என இவர்கள் இரண்டு பேரும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்துக்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருகாங்க. அதே போல புனேவில் இருக்கக்கூடிய Serum Institute Of India மற்றும் ஆஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து ஆராய்ச்சியிலும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

சின்ன பின்னடைவு:

Serum Institute Of India முன் ஏற்பாடாக தற்போதே பல்வேறு தடுப்பு மருந்துக்கள் தயாரிக்க தொடங்கி விட்டார்கள் எப்படியும் நாம் இதில் வெற்றி அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை. ஆனாலுமே இது ரொம்ப கஷ்டமான விஷயம் தான். ஏனென்றால் ஆஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் அடைந்த ஆராய்ச்சியில் சமீபத்தில் குரங்குகள் மீது செலுத்தி பரிசோதனை செய்த போது, அது வெற்றிகரமாக அமையவில்லை. அதனால் அடுத்த கட்டத்துக்கு போறதுக்கு ஒரு சின்ன பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த இரண்டு நிறுவனங்களும் சரி, தற்போது தொடர்ந்து தங்களுடைய முயற்சியை கைவிட போவதில்லை, நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு தான் இடுப்போம் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

கொரோனா தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி:

தடுப்பு மருந்து தயாரித்து விட்டோம் என்றால், அடுத்து என்னென்னெ சோதனைகள் காத்துக் கொண்டு இருக்கு ? என்னென்ன  சவால்கள் காத்திட்டு இருக்கு ? அப்படின்னா.

உற்பத்தி திறனை அதிகரிப்பது அவசியம் : கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி கிடைச்சாச்சு, அதற்கப்புறம் அத்தனை கோடி பேருக்கு நாம் தயாரிக்க வேண்டிய ஒரு சூழல் இருக்கு. உலகெங்கும் எல்லாருக்குமே கிடைக்க வேண்டிய ஒரு சூழலும்  இருக்கு. அதனால உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய அவசியம்.

உற்பத்தித் திறனை அதிகரிக்க கூடிய அதே நேரத்தில், உற்பத்தி நேரத்தை குறைக்க வேண்டும் என்பதும் முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. குறைந்த காலகட்டத்தில் இது தயாரிக்கப்பட வேண்டும்.

நியாயமான விலை நிர்ணயம் தேவை பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருக்கக் கூடாது, ஏழை மக்களும் கூட இது கிடைக்கணும் ரொம்பவே ஆர்வமாக இருக்காங்க. இதற்கான முன்னெடுப்புகளை எல்லா நாட்டு அரசுகளும் எடுத்துட்டு வர்றாங்க.

இந்தியாவை பொருத்தவரை  சிரம்  இன்ஸ்டியூட் ஆப் இந்தியா ( Serum Institute Of India )வின் நிறுவனர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால், கொரோனா தடுப்பு மருந்து ஆயிரம் ரூபாய் விலைக்கு போகும் என்று தன் கருத்தை தெரிவித்துள்ளார். தற்போதைக்கு இது எல்லா தரப்பு மக்களுக்கும் ஒரு சீரான விலையில் கிடைக்க வேண்டும் அப்படிங்கிற பணிகள் போய்கிட்டு இருக்கு.

உலகெங்கும் சீரான வினியோகம் அத்தியாவசியம்

எப்படி பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடாது, ஏழைகளுக்கு கிடைக்கணும் அப்படிகின்ற விஷயத்தை பாக்கிறோமோ அதே மாதிரி தான். பணக்கார நாடுகள் மட்டுமல்ல, ரொம்ப மருத்துவத்துறையில் பின்னடைவில் இருக்கக்கூடிய ஆசிய நாடுகளாக இருக்கட்டும்,  அமெரிக்க நாடுகளாக இருக்கட்டும், தென் அமெரிக்கா  நாடுகளாக இருக்கட்டும், முக்கியமா ஆப்பிரிக்க நாடுகளாக இருக்கட்டும் என எல்லா இடத்திலுமே சீராக கொரோனா தடுப்பு மருந்து விநியோகிக்க வேண்டும் என்பதில் ரொம்ப உறுதியாக இருக்கிறாங்க எல்லாம் மருந்து நிறுவனங்களும்.

கொரோனா மருந்து தோல்வி ?

இப்போ நாம முன்னாடி இருக்கக்கூடிய ரொம்ப முக்கியமான கேள்வி என்னவென்றால், இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு, இத்தனை பேரின்  உழைப்பு, இத்தனை மணி நேர ஆராய்ச்சி இதையெல்லாம் தாண்டி, இந்த முயற்சிகள் தோல்வி அடைய வாய்ப்பு உண்டா ? அப்படின்னு கேட்டா அதுக்கு பதில் ”ஆம்” தான். HIV போன்ற கொடிய தொற்று ஒரு முப்பது, நாற்பது ஆண்டுகளாக நாம சந்தித்துக்கொண்டு வருகின்றோம்.

மருந்து கிடைக்காமல் போகும்? 

ஆனால் இன்னைக்கு வரை HIVக்கான  முறையான தடுப்பு மருந்து கிடையாது. அதே மாதிரி தான் பல்வேறு கொடிய நோய்களுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதே போல கொரோனாவுக்கு கூட தடுப்பு மருந்து கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் மாஸ்க் அணிவதாக இருக்கட்டும், கையுறை அணிவதாக இருக்கட்டும், கைகளை சுத்தமாக கழுவுவதாக இருக்கட்டும் இதுவெல்லாம் வாழ்க்கையோட அன்றாட ஒரு சாதாரண விஷயமாகவே, இயல்பான ஒரு விஷயமாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.

62 நாட்டில் சோதனை:

இது தோற்று போக வாய்ப்புள்ளது என்றால்  நிறையா காரணம் சொல்லப்படுது. முக்கியமான காரணம் என்னவென்றால் கொரோனா புரதத்தில் தொடர்ந்து மாற்றம் நிகழ்வது, இதற்கான  முக்கியமான சவாலாக பார்க்கப்படுகின்றது. கொரோனா வைரஸின் புரதத்தை சார்ந்து தான் தடுப்பு மருந்தானது தயாரிக்கப்படும். கொரோனா வைரஸ் உள்ள ஒரு 62 நாடுகளில் கொரோனா வைரஸை ஆராய்ச்சி  மேற்கொண்டார். 62 நாட்டிலும் ஒவ்வொரு பரிணாமத்தை இது வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் முட்டுக்கட்டை: 

இந்தியாவிலும் கூட மும்பை நகரத்தில் இருக்கக்கூடிய கொரோனா வைரசுக்கும், சென்னையில் இருக்கக்கூடிய கொரோனா வைரசுக்கு வித்தியாசம் இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த மாற்றமானது தடுப்பு மருந்து தயாரிப்பில் ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறது. இந்த சவாலை தாண்டி தான் இதற்கான பணிகள் நடக்கும். இறுதியாக தடுப்பு மருந்து என்று பார்த்தோமானால் இரண்டாம் கட்டம்,  மூன்றாம் கட்டம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நிரந்தர தீர்வு: 

அதுக்கு முன்னாடி என்ன ? நம்முடைய சுய பாதுகாப்பை உறுதி பெற்று வேண்டிய அவசியம் உள்ளது. சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நம்முடைய கைகளில் தான் உள்ளது. சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது, கையுறைகள் பயன்படுத்துவது, கைகளை முறையாக கழுவுவது எல்லாவற்றையும் ஒரு தொல்லையாக பார்க்காமல,  நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பழகிக் கொள்வது தான் தற்போதைய நிலையில் கொரோனவுக்கான  நிரந்தர தீர்வாக பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |