Categories
உலக செய்திகள்

அத்துமீறும் சீனா… அதிரடி காட்டும் இந்தியா..! எல்லையில் பதற்றம் ஏன்?

கடந்த சில வாரங்களாகவே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லையோர பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருகின்றது. இதன் தற்போதைய நிலை குறித்தும், பின்னணி குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அவற்றை மத்திய ஆட்சிக்கு உட்பட்ட யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது முதலே,  இந்தியாவின் எல்லையோர நடவடிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது சீனா. அருணாச்சல பிரதேசம், சிக்கிம் என பல ஆயிரம் கிலோமீட்டர்  எல்லை நெடுக நீண்டகாலமாகவே அத்துமீறி வந்த சீனாவுக்கு இந்தியாவில் சமீப கால துணிச்சலான நடவடிக்கைகள் சீனத்தை ஏற்படுத்தி இருந்தன. தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியா – சீனா மோதல்:

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சர்வதேச எல்லைக்கோடு பின்பற்றப்படவில்லை. 1962 ஆம் ஆண்டு போருக்கு பிறகு, இரு நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை வரையறுக்கும் வகையிலேயே படைகள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே படைகளை குவிப்பதும்,  ஹெலிகாப்டர்களை உலவ விடுவதும்,  ஆங்காங்கே முகாமிட்டு, பதுங்குகுழி அமைப்பதும் சீனாவின் வாடிக்கை. பல நேரங்களில் எல்லை தாண்டுவதும் உண்டு. இதன் இரு பகுதிகளிலும் நடக்கும் மோதல்களும், எல்லைமீறல்களும் உள்ளூர் அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும்.

சீனா அத்துமீறல்:

ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு அருகில் தொடங்கிய மோதல்கள் நாடுகளுக்கிடையே அரசு முறை பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கின. உயர்நிலையில் திட்டமிட்டே சீனா அத்து மீறியதாகவும் இந்திய ராணுவம் கருதியது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீன ராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் அத்துமீறல்களுக்கு லடாக்கில் இந்திய அமைத்திருக்கும் 255 கிலோ மீட்டர் நீள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சாலையும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

சீனாவுக்கு இணையாக இந்தியாவும்:

லடாக்கின் தலைநகர் ‘லே’யிலிருந்து தர்புக், ஷியோக், முர்கோ வழியாக தவுலத் பெக் ஒல்டி  என்ற சீன எல்லையை ஒட்டிய பகுதி வரைக்கும் இந்த சாலை நீண்டு இருக்கிறது. இந்த சாலை வழியாக மிக எளிதாகவும், வேகமாகவும் படைகளை எல்லை வரைக்கும் நகர்த்த முடியும். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இருந்தாலும், கடந்த ஆண்டில்தான் பணிகள் நிறைவடைந்தன. எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் சீன ராணுவ கட்டமைப்புகளை வலுப்படுத்தி இருக்கும் நிலையில், இந்தியாவும் அதற்கு இணையான பணிகளை தொடங்கி இருப்பதாகவே பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்

Categories

Tech |