Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்குமா ? முக.ஸ்டாலின் கேள்வி

கடைமடை வரை தூர் வாரவேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முறைகேட்டுக்கு இடம் தராமல் வெளிப்படையாக கடைமடை வரை தங்குதடையின்றி தூர்வார வேண்டும். அணை திறக்க இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் டெல்டாவில் கால்வாய்களை தூர் வாரி விட்டீர்களா ? மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவித்துவிட்டு இப்போது தூர்வாரும் பணிகளை அறிவித்துள்ளது அரசு. மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர் கடைமடை பகுதிக்கு சென்று அடையுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அணையில் இருந்து வரும் காவிரி நீர் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் என்பது புதிராகவே உள்ளது. டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |