சென்னையில் நேற்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டையை தொடர்ந்து தண்டையார் பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 4,781 பேர் குணமடைந்துள்ள நிலையில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :
ராயபுரம் – 1,981
கோடம்பாக்கம் – 1,460
திரு.வி.க நகரில் – 1,188
அண்ணா நகர் – 867
தேனாம்பேட்டை – 1,118
தண்டையார் பேட்டை – 1044
வளசரவாக்கம் – 703
அம்பத்தூர் – 446
அடையாறு – 579,
திருவொற்றியூர் – 300
மாதவரம் – 223
பெருங்குடி – 168
சோளிங்கநல்லூர் – 173
ஆலந்தூர் – 121
மணலி – 142 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 63 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.