Categories
தேசிய செய்திகள்

சென்னை உட்பட இந்தியா முழுவதும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது!

சென்னை உட்பட இந்தியா முழுவதும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். அதன்படி நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கி உள்ளது.

அதேபோல சென்னையில் இருந்து விமான சேவை 60 நாட்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது. முதல் விமானம் சென்னையில் இருந்து காலை 6.40 மணிக்கு 111 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டது. முதல் விமானமாக இன்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. மாஸ்க்குடன் கூடுதலாக முகம் முழுவதையும் மறைக்கும் பிளாஸ்டிக் மாஸ்க்கையும் பயணிகள் அணிந்துள்ளனர்.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பயணிகள் கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று https://tnepass.tnega.org – பதிவு செய்து இ-பாஸ் பெறலாம். விமான நிலையத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். நோய் அறிகுறி இல்லாமல் இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனை ஏதும் இல்லை என்பது குறித்தும் உறுதி மொழி அளிக்க வேண்டும். தங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரவில்லை என்பதற்கான உறுதியை விமானப்பயணிகள் தர வேண்டும் என்பது உள்ளிட்ட நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Categories

Tech |