சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கே.எம்.சி மருத்துவமனையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபரும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 65 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள், திருவள்ளூரை சேர்ந்த 50 வயது ஆண் ஒருவரும், கொடுங்கையூரை சேர்ந்த 46 வயது ஆண் நபர் ஆவார்கள். ஓமாந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மண்ணடியை சேர்ந்த 75 வயது முதியவர் பலியாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து, பூந்தமல்லியை சேர்ந்த 75 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேபோல, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஓட்டேரியை சேர்ந்த 46 வயது ஆண் நபர் கொரோனவால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் அதிகபடச்சமாக 10,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். இதனை காரணமாக பலி எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இன்று 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.