Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 49ஆக உயர்வு – சமூக பரவலாக தொடங்கிவிட்டதாக அச்சம்!

புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கியானது 49ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாற தொடங்கிவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் கூறியுள்ளார். மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் மட்டுமே அங்கு கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பதை தீவிரப்படுத்துமாறு ஆட்சியர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |