துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்ததாகவும், அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை தற்போது நலம் விசாரிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு நேரடியாகவே வந்து போனார் அதன் பின்னராக மருத்துவமனை தரப்பிலிருந்து வெளியிடபட்டுள்ள செய்திக்குறிப்பில் டிஸ்சார்ஜ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.