தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,324ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டாலும் தமிழகத்தில் சில தளர்வுகள் அளித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாலையில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 39 பேரில் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் 30 பேர்கள், சென்னையில் இருந்து வந்த 5 பேர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் இருந்து வந்த 2 பேருக்கும், விழுப்புரத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கியானது 225ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலையில் 81 பேர் குணமடைந்துள்ள நிலையில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல செங்கல்பட்டில் இன்று புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 824 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கன்னியாகுமரியில் மேலும் 3 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல சென்னை ராயபுரம் மண்டலத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ராயபுரம் மண்டலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 2,071 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தினமும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தற்போதைய நிலவரப்படி 130கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.