Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இந்தியாவில் மட்டும்…! ”அந்நியர்களுக்கு BYE” அசத்தும் ஃபேஸ்புக் …!!

இனி மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களின் போஸ்புக் கணக்கை இயக்க முடியாது…!

கொரோனா பாதிப்பினை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 30 முதல் 60 விழுக்காடாக அதிகரித்துள்ளது.பயனாளர்கள் எண்ணிக்கை ஒரு புறம் அதிகரிக்க ஹேக்கிங்களும் மறுபுறம் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பயனாளர்களை மட்டுமே கவரும் வகையில் அன்னியர்கள் தங்களின் பேஸ்புக் கணக்கை பார்க்க முற்பட்டாள் கணக்கு முடங்கும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இந்த புதிய வசதியை பயன்படுத்தும் கணக்குகளில், அந்நியர்கள் நுழைய முற்பட்டால் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என பாப்பப் நோட்டிபிகேஷன் தகவல் மட்டுமே செல்லும். அவர்கள் பதிவிடும் போஸ்ட் மற்றும் புகைப்படங்கள் குறித்த தகவல்களை மற்றவர்கள் பார்க்க முடியாது. மேலும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து இயங்குதளத்தில் இயங்கும் பேஸ்புக் செயலாளர்களும் இந்த வசதியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |