நடிகர்களின் சம்பள விஷயத்தில் தலையிட முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் நடிகர்களின் சம்பள விஷயத்தில் தலையிட முடியாது என்பது ஆர்கே செல்வமணி க்கு தெரியும். தயாரிப்பாளர்கள், திரையரங்கம், நடிகர் சங்க பிரதிநிதிகள் பேச ஏற்பாடு செய்தால் அரசு உதவும். கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே திரையரங்கு திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தது போல கனவு காண்பார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்தார்.