சென்னையில் பிரபல நடிகர் நடத்தி வரும் ஆதரவற்றோர் விடுதியில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பணிப்பெண்கள் இருவர் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு இல்லாதவர்களை வேறு இடத்தில் தங்க வைக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். இதனை காரணமாக பலி எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் அதிகபடச்சமாக 10,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,324 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, ராயபுரம் மண்டலத்தில் இன்று மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொற்று எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியது. அதேபோல, சென்னையில் மட்டும் இன்று 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.