Categories
தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

0_வாக இருந்த தருமபுரி….! ”மீண்டும் வந்த கொரோனா” அச்சம் கொண்ட மக்கள் ..!!

தர்மபுரியில் 15 நாட்களுக்கு பின்பு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பிய பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.கொரோனா இல்லாத மாவட்டமாக தர்மபுரி இருந்த நிலையில் தற்போது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரியில் ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 5 பேரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. கோவை, திருப்பூர், நாமக்கல் கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |