Categories
தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பச்சை மண்டலத்தில் இருந்து நீங்கும் தருமபுரி… 15 நாட்களுக்கு பிறகு இன்று ஒருவருக்கு கொரோனா..!!

தருமபுரியில் 15 நாட்களுக்கு பின் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்று தருமபுரி திரும்பிய தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உருகும் பாதிப்பு ஏற்படாமல் இருந்ததால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இங்கு 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், தருமபுரி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் 15 நாட்களுக்கு பிறகு இன்று ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |