Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சூளைமேட்டில் பூட்டிய வீட்டிற்குள் முதியவர்கள் சடலம் …!!

சென்னை சூளைமேடு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டு காலமாக வயதான தம்பதியர் இங்கு வசித்து வந்திருக்கிறார். ஜீவன் என்ற 80 வயது உடையவர், அவரின் மனைவி தீபா (70). இவர்களை யாரும் பார்த்துக் கொள்வதற்கு இல்லை என்ற காரணத்தால் தனிமையில் வசித்து வந்துள்ளனர். தற்போது இறந்த  நிலையில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அருகாமையிலிருந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், கடந்த சில நாட்களாகவே இந்த வீட்டில் யாரும் வரவில்லை என்ற தகவலை காவல்துறையினருக்கு கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் இந்த பகுதிக்கு வந்தார்கள். அப்போது அந்த வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்ததால் கதவை உடைத்து சென்று உள்ளே சென்ற போது அழுகிய நிலையில் இருவரது உடல் கண்டறியப்பட்டுள்ளது.

ஒருவேளை கொரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக அவர்கள் உயிர் இருக்கலாமோ என்ற ஒரு கோணத்திலும் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதன் காரணமாக சுகாதாரத் துறையில் இருந்து 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். இங்கிருந்து அமரர் ஊர்தியில்  இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Categories

Tech |