அதிரடியாக விளையாடி 27 பந்தில் 78 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமான ரிசப்பன்டை டெல்லி அணி கேப்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.
பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 176 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக யுவராஜ்சிங் 53 (35) ரன்களும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), விளாசினார். குருணால் பாண்டியா 32 (15 ) ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். டெல்லி அணியில் இஷாந்த் சர்மா, ரபடா தலா 2 விக்கெட்டுகளும், பவுல்ட், அக்ஷர் படேல், கீமோ பவுல், ராகுல் திவேதியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
போட்டி முடிந்த பிறகு டெல்லி அணி கேப்டன் ஷிரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் உண்மையிலேயே சிறப்பாக விளையாடக்கூடியவர். ரிசப் பன்ட் எதிரணிகளுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய பேட்ஸ்மேனாக விளங்குகிறார். கடந்த 1 ஆண்டாக அவரது ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. ரிஷப் பண்ட் எங்கள் அணிக்கு கிடைத்தது மிக சிறப்பான ஒன்றாகும் என கூறியுள்ளார். மேலும் அவர் கேப்டன் பதவி எனக்கு கிடைத்திருப்பது மிகவும் கவுரவமாகும். கேப்டன் பதவிக்காக உண்மையிலேயே முழு அளவில் என்னை தயார்ப்படுத்தி கொண்டுள்ளேன். இந்திய ‘ஏ’ அணிக்கு நான் கேப்டனாக இருந்துள்ளதால் இந்த அனுபவம் எனக்கு கை கொடுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.