கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் 18 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள், 25 பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 896 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை அம்மாநிலத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது. இந்த நிலையில், கேரளாவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கேரளாவிற்கு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் கடந்த ஒரு வாரமாக கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. மேலும், கொரோனா தொற்றுப் பரவல் அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை கேரளாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 847 ஆக இருந்தது. குறிப்பாக நேற்று 53 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.