தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 491 பேர் ஆண்கள், 314 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 41 அரசு மற்றும் 27 தனியார் மையங்கள் என மொத்தம் 68 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனோவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 118ஆக உயர்ந்துள்ளது. நீரிழவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்கனவே இருந்தவர்கள் தான் 84% பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.