Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…சிரமம் உண்டாகும்…திறமை வெளிப்படும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!    இன்று சிக்கல்கள் தீர செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். வேகமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடிக்க முடியாது கொஞ்சம் சிரமம் இருக்கும். தேவையான உதவிகள் மட்டும் வந்து சேரும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு கிடைக்கும். தைரியம் கூடும். உங்களுடைய வாக்கு வன்மையால் எதையும் சாதகமாகவே செய்து முடிப்பீர்கள்.

திறமை அதிகரிக்கும். தொழில் திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் மட்டும் இருக்க வேண்டும். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசித்து செய்யுங்கள். முடிந்தால் கண்டிப்பாக பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமையான நாளாக இருந்தாலும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

அதேபோல உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கொஞ்சம் கவனமாக இருங்கள். வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் எழக்கூடும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களது அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறம்.

Categories

Tech |