Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்…!

மிதுன ராசி அன்பர்களே …!       இன்றைய நாள் உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவு எடுப்பீர்கள். முன்னோர் சொத்துக்களில் முறையான லாபம் கிட்டும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றம் அடைவார்கள். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது மட்டும் நல்லது.

இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் உண்டாகும்.  பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் விருந்தினர் வருகை இருக்கும். அதனால் செலவுகள் கொஞ்சம் ஏற்படும். ஆன்மீகத்திலும் நாட்டம் செல்லும்.இன்று காதலர்கள் மட்டும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்.

பேசும் போது நிதானத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ள மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |