Categories
அரசியல்

பலரும் பாராட்டுறாங்க… ! ”அமெரிக்கால இருந்து புகழுறாங்க” டாப்பில் தமிழ்நாடு …!!

கொரோனா பரிசோதனையில் தமிழகத்தை பலரும் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது,  டெஸ்டிங்கை பொறுத்தவரை இந்தியாவிலேயே அதிகபட்சமான பரிசோதனை நாம் செய்துள்ளோம். பிற மாநிலம் எல்லாம் ஒரு லட்சம், 1 1/2 லட்சம், ரெண்டு லட்சம் இப்படி பல மாநிலங்கள் பண்ணும்போது அதிகபட்சமாக 4 லட்சத்து 21 ஆயிரம் டெஸ்ட் இந்தியாவிலேயே அதிகமாக பண்ணி உள்ளோம்.நம்மைவிட மக்கள் தொகையில் அதிகமான மாநிலங்கள், நம்மை விட அதிகமான கொரோனா கேஸ் இருக்கக்கூடிய மாநிலங்கள் கூட 3 லட்சத்து 62 ஆயிரம், 3 லட்சத்து 17 ஆயிரம், 3 லட்சத்து 14 ஆயிரம், 2 லட்சத்து 6 ஆயிரம் என்று தான் டெஸ்ட் செய்துள்ளார்கள்.

என்ன காரணம் ? என்றால் அதிகமாக டெஸ்ட் செய்தால் தான் டேட்டா கிடைக்கும், டேட்டா இருந்தால் தான் சில ஆராய்ச்சிகளை செய்து அதில் கிடைக்க கூடிய முடிவுகளை வைத்து மருத்துவ குழு அரசுக்கு பரிந்துரை செய்து, அரசு சில முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதற்காக தான் சோதனையை அதிகமாக தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றோம்.

இதற்க்கு மத்திய அரசு நம்மை பாராட்டினார்கள். உலக சுகாதார நிறுவனம் பாராட்டுறாங்க. முதலமைச்சரிடம் தமிழ்நாடு நல்லா டெஸ்ட் பண்றீங்க, பிரமாதமா பண்ணுறீங்க, இதே நிலையில் தொடர்ந்து செய்யுங்கள், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை நினைத்து கவலை படாதீங்க. தொடர்ந்து சோதனை செய்யுங்க, அப்போ தான் தெரியும் அவர்கள் மூலமாக கொரோனா பரவல் வந்துவிடக்கூடாது என்று சௌமியா சுவாமிநாதன் முதல்வரிடம் ஜெனீவாவில் இருந்து பேசினாங்க.

Categories

Tech |