இந்திய எல்லைக்கோடு அருகே சீனா தனது ராணுவ படைகளை குவித்து வருகிறது. 5 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்திருக்கிறார்கள். அதேநேரம் இந்தியாவும் தனது எல்லையில் ராணுவ படைகளை குவித்து வருகிறது. ஏன் ? எதுக்கு ? அரசியல் நிபுணர்கள் உடைய பல்வேறு கருத்துக்கள் சொல்றாங்க. எதற்காக ? சீனா தன்னுடைய ராணுவப் படைகளை இந்திய எல்லை கட்டுப்பாடு பகுதிகளை குவிக்கிறார்கள், பதிலுக்கு இந்தியாவும் குவித்துள்ளது. இதற்கு என்ன காரணம் ? அப்படின்னு பல காரணங்களைச் சொல்கிறார்கள்.
என்னென்ன காரணங்கள் அப்படின்னு பார்க்கலாம் ?
கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க எல்லையில் சீனா அத்துமீறல்:
கொரோனாவின் பிறப்பிடம் சீனா, அப்படிங்கிறது எல்லாருக்குமே தெரியும். சீனாவில் வுகான் மாகாணத்தில் தான் முதல் கொரோனா நோயாளி இருந்தாங்க. ஆனால் அங்கு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துட்டாங்க. ஆனால் இதற்க்கு பல்வேறு நாடுகளும் சீனாவை குற்றம் சாட்டுகிறார்கள்.சீனாதான் சர்வதேச அளவில் கொரோனா பரவுறதுக்கு காரணம் அப்படின்னு எல்லாரும் சீனாவை கைநீட்டி காட்டுறாங்க
கொரோனா பரவல் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவை குற்றம் சாட்டுகின்றன.
அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியா உட்பட உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நாடுகளும் கொரோனவை ஏற்றுமதி செய்தது சீனா தான் என குற்றம் சாட்டுவதால் அதனை திசை திருப்பும் வகையில் சீனா இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதாக சொல்கிறார்கள்.
சர்வதேச அளவில் சீனாவுக்கான மதிப்பு குறைந்து வருகிறது.
கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்று சொல்லும் போது, சர்வதேச அளவில் சீனாவுக்கு என்று இருந்த தனி மதிப்பு நாளுக்கு நாள் குறைய தொடங்கி இருக்கிறது. உலகின் உற்பத்தி மையமான சீனா தனது பொருட்களை, மற்ற நாடுகளில் விற்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். அசலை உற்பத்தி செய்வதை காட்டிலும் அசலுக்கு நிகரான போலியை உற்பத்தி செய்வதில் சீனர்கள் கைதேர்ந்தவர்கள். எங்கேயும் ஒரு டூப்ளிகேட் வேணும் அப்படின்னு கேட்டா சீனாவை தான் எல்லாரும் சொல்லுவாங்க.
சீனா ஏற்றுமதியில் மிகப்பெரிய ஒரு நாடு. சீனாவில் இருந்து நிறைய நாடுகள் இறக்குமதி செய்கிறார்கள். இதனால சீனாவுக்கு எல்லா நாடுகளும் குற்றம்சாட்டுவதால் நமக்கு பாதிப்பு ஏற்படுமோ, உற்பத்தி செய்வதில் நமக்கு பாதிப்பு ஏற்படுமோ, தனது பொருட்களை மற்ற நாடுகளுக்கு விற்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். இதை எப்படி நாம் சமாளிக்க என்று எல்லையில் ஒரு புதிய பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள் அப்படின்னு ஒரு காரணம் சொல்லபடுகின்றது.
1949 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி இதுபோன்ற ஒரு நெருக்கடியை சந்தித்தது இல்லை.
1949 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆட்சி செய்துட்டு வராங்க. இதுவரைக்கும் இது மாதிரியான கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சந்தித்தது இல்லை. இதனால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு கெட்ட பெயர், அவ பெயர் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இருக்குறதா சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சீன மக்கள் என்னடா இப்படி பண்ணிட்டாங்க? என்று மக்களிடம் ஒரு அதிருப்தி ஏற்படுமோ ? என்ற ஒரு அச்சம் இருப்பதாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
தெற்காசியாவில் இந்தியா வளர்ந்து வருவதை தடுக்க சீனா திட்டம் ?
சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நாடா வளர்ந்து வரக்கூடியது இந்தியா. இதை நாம் வளரவிடக்கூடாது, அப்படிங்கிறது தடுப்பதற்கு சீன திட்டமாக இருக்குமோ என்று கூட அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
அமெரிக்காவுடனான வர்த்தக உறவு கேள்விக்குறியாக உள்ளது:
அமெரிக்கா சீனாவின் பொருட்களை அதிகமாக இறக்குமதி செஞ்சுகிட்டு இருந்தாங்க. பெரிய அளவில் சந்தை அமெரிக்காவிடும் இருந்த நிலையில் தற்போது இருக்கக் கூடிய பொருளாதார சூழ்நிலை எல்லாருமே சீனாவை குற்றம் சுமத்துவதால் அமெரிக்காவுடனான வர்த்தக உறவு கேள்விக்குறியாகி வருகிறது. அதனால மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் சீனாவுக்கு இருக்கு
உலக சுகாதார அமைப்பில் கொரோனா பரவல் குறித்து விசாரிக்க கோரிக்கை வைத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மாகாணத்தில் தான் பரவியது. இதை உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா உட்பட உலக நாடுகள் அனைத்தும், சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்காங்க, கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும். அதில் இந்தியாவும் இணைந்து இருப்பது கூட ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது .
இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த சீனா திட்டம் ?
ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் பொருளாதாரம் சரிந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும் ஒரு நெருக்கடியை கொடுக்க சீனா திட்டமிட்டிருக்கும், அதனால தான் எல்லையில் படைகளைக் குவித்து கொண்டிருக்கிறார்கள் அப்படின்னு காரணம் சொல்லப்படுகின்றது.
சீனா தற்போது எல்லையில் படைகளை குவித்து வருகிறது ஒரு புதிய ஐடியா கிடையாது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் புதிய யோசனையானா இல்ல. சீனாவின் அதிபர் மட்டுமல்ல ஜி ஜின்பிங், ராணுவத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் தான் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 1962ல் சீனாவில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதிபராக இருந்த மாவோ ஜெடாங்கின் தவறான கொள்கை தான் காரணம் என்று சொல்லப்படுகின்றது.அப்போதும் இதே போன்று எல்லையில் ஒரு பிரச்சினையை உருவாக்கியவர் தான் இந்த மாவோ ஜெடாங். 1979ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு பொருளாதார பாதிப்பை திசை திருப்ப அப்போதைய அதிபர் டெங்க் ஜியோபிங் வியட்நாம் போரை நடத்தினார் அப்படின்னு சொல்லப்படுவது.
எது எப்படியோ இப்படி பல கட்டமாக சீனா இந்தியாவை வம்புக்கு இழுப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 5 ஆயிரம் வீரர்களைக் குவித்து இருந்தாலும், இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆயத்தமாக இருக்கிறது. எது எப்படியோ நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்ன நடக்கிறது ? சீனாவின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.