தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 5,31,179 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் 4,22,867 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு விதிமீறில் – ரூ.7.85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மாதவரம் புறநகர் பகுதிதியில் இயங்கி வரும் தற்காலிக பூ மற்றும் பழ மார்க்கெட்டில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்து வருகிறார். கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரும் உடன் ஆய்வு செய்து வருகின்றனர்.