Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,065 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,331 பேர் குணமடைந்துள்ள நிலையில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :

ராயபுரம் – 2,065
கோடம்பாக்கம் – 1,488
திரு.வி.க நகரில் – 1,253
அண்ணா நகர் – 924
தேனாம்பேட்டை – 1,188
தண்டையார் பேட்டை – 1096
வளசரவாக்கம் – 740
அம்பத்தூர் – 472
அடையாறு – 619,
திருவொற்றியூர் – 322
மாதவரம் – 237
பெருங்குடி – 185
சோளிங்கநல்லூர் – 184
ஆலந்தூர் – 132
மணலி – 152 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 74 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |