செங்கல்பட்டில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 832 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 255 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 568-ல் இருந்து 580 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மூலமும், வெளிமாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் மூலமாகவும், கோயம்பேடு சந்தை தொடர்பு மூலமும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.