நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேரில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது ஒருவர் மட்டுமே நீலகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. ஒரு புறம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதமும் உயர்ந்து வருவது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
நேற்று 407 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,731ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 51.11% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருப்பூர், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கோவை ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். அதேபோல வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை, பெரும்பலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சற்று மீண்டு வருகின்றது. இந்த நிலையில் நீலகிரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேரில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை நீலகிரியில் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.