மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மேற்கு கடற்கரை பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைகாலத்தை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஏப்.15 – ஜூன் 14 வரை இருந்த தடைக்காலம் ஏப்.15 – மே 31 ஆக குறைக்க பட்டுள்ளது. அதேபோல, இந்தியாவின் மேற்கு கடற்கரையில் ஜூன் 1 – ஜூலை 31 வரை இருந்த தடைக்காலம் ஜூன் 15- ஜூலை 31 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி மீன்பிடிக்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊடரங்கு பிறப்பிக்கப்பட்ட காலங்களில் மீன்பிடிக்கவும் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது பிரிவு வாரியாக மீன்பிடித்தடைக்காலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. எந்த தேதியில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லலாம் என்பது தொடர்பான அறிக்கையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அனுப்பியுள்ளார்.
அதில் மேற்கண்ட இரண்டு கடற்கரை பகுதிகளில் எப்போது மீன்பிடி தொழில்களை தொடங்கலாம் என்று அறிவித்துள்ளார். எனவே விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் பணிகளுக்காக தயார் நிலையில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கு காலத்தில் மீனவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பான விவரங்களையும் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.