நாடாளுமன்ற தேர்தலையடுத்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பு வெளியாகியதையடுத்து தேசிய கட்சிகள் அடுத்தடுத்து தேர்தல் பணியை வேகப்படுத்தினர்.இதையடுத்து அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் , பாரதீய ஜனதா கட்சியும் தேர்தல் வெற்றிக்காக வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். மேலும் மாநில அளவிலான நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டனர்.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டிய முன் நடவடிக்கைகள், தேர்தல் பிரசாரங்கள், ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் தேர்தல் சுற்றுப்பயணங்கள் குறித்து பல்வேறு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகின்றது. மேலும் தேர்தலில் வெற்றி மீணடும் ஆட்சியை பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.