இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது…
நாட்டில் கடந்த 15 நாட்களில் மட்டும் 70 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கிய 100 நாட்களுக்கு பிறகே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை கடந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வரையிலான பதினைந்து நாட்களில் மட்டும் 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளி விவரம் வெளியீட்டுஉள்ளது மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் கடந்த 12 நாட்களில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 நாட்களில் இரண்டு மடங்கு உயர்த்துள்ளதாகவும் குறிப்பாக இரண்டு நாட்களில் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.