Categories
மாநில செய்திகள்

திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில் – பொதுமக்கள் அவதி!

திருச்சி, கரூர், ஈரோடு, வேலூரில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிந்து வருகிறது. வேலூரில் அதிகபட்சமாக 100 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. ஈரோட்டில் அதிகபட்சமாக 103 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. கரூரில் அதிகபட்சமாக 104 டிகிரி முதல் குறைந்தபட்சம் 83 டிகிரியாக உள்ளது.

மதுரையில் அதிகபட்சமாக 103 டிகிரி முதல் குறைந்தபட்சம் 82 டிகிரியாக உள்ளது. திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி முதல் குறைந்தபட்சம் 84 டிகிரியாக உள்ளது. இந்த நிலையில் திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர், மதுரையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த 9 மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியசையும் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |